மீண்டும் இந்தி படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்...?

நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக ரகு தாத்தா என்ற படம் வெளியானது. அதையடுத்து ஹிந்தியில் அவர் நடித்த முதல் படமான பேபி ஜான் வெளியானது. தெறி படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் கொஞ்சம் கிளாமர் ஹீரோயினாகவும் தலை காட்டினார் கீர்த்தி சுரேஷ். அதையடுத்து அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் இதுவரை அவர் புதிய படங்களில் கமிட்டாகவில்லை.
தற்போது அவர் அக்கா என்ற ஒரு வெப்சீரிஸில் நடித்திருக்கிறார். இது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. வரலாற்று கதையில் உருவாகியுள்ள இந்த அக்கா வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் அடுத்தபடியாக இந்தியில் இருந்து ஒரு ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிப்பதற்கும் கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு வந்துள்ளதாம். அப்படத்தில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.