நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்


நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
x
தினத்தந்தி 12 Dec 2024 3:21 PM IST (Updated: 12 Dec 2024 3:29 PM IST)
t-max-icont-min-icon

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்வில் நடிகர் விஜய் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைதொடர்ந்து "ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன்" போன்ற படங்களில் நடித்து உள்ளார். 'நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார். மேலும் அந்த படத்திற்கு தேசிய விருது வென்றார். தற்போது தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் உருவான பேபிஜான் என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதற்கிடையே, கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை 15 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். அந்த காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். இவர்களின் காதலுக்கு மதம் ஒரு பிரச்சனையாக இல்லை.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமண நிகழ்வில் நடிகர் விஜய் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.


Next Story