சினிமாவில் 65 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்

ஐந்து வயதில் நடிக்கத் தொடங்கிய கமல்ஹாசன் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவிற்குள் அம்மாவும் நீயே..அப்பாவும் நீயே...என பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் இன்றோடு 65 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக 'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் திரையில் தோன்றி, முதல் படத்திலேயே ஜெமினிகணேசன், சாவித்ரி, மனோரமா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் கமல்.
குழந்தை நட்சத்திரமாக காண்போரின் இதயத்தை மட்டுமல்லாது, தேசிய விருதையும் தட்டிச் சென்றார். நடிப்பு, பாடல், தயாரிப்பு, நடனம், அரசியல் என பல்வேறு துறைகளிலும் தனக்கே உரிய தனித்தன்மையுடன் ஜொலித்துவருகிறார் கமல்ஹாசன்.
ஐந்து வயதில் நடிக்கத் தொடங்கிய கமல்ஹாசன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி எனப் பல மொழிகளிலும் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Related Tags :
Next Story






