'கண்ணப்பா' படத்தில் பார்வதி தேவியாக நடிக்கும் காஜல் அகர்வால்!...வைரலாகும் போஸ்டர்


கண்ணப்பா படத்தில் பார்வதி தேவியாக நடிக்கும் காஜல் அகர்வால்!...வைரலாகும் போஸ்டர்
x
தினத்தந்தி 6 Jan 2025 5:46 PM IST (Updated: 6 Jan 2025 5:47 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கில் உருவாகியுள்ள ஆன்மிக திரைப்படமான 'கண்ணப்பா' படத்தில் நடிகை காஜல் அகர்வால் பார்வதி தேவியாக நடித்துள்ளார்.

சென்னை,

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் கண்ணப்பா. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

இதில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய வேடத்திலும் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் சிவனாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்சய் குமாரும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இதற்கிடையில் 'கண்ணப்பா' படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் நடித்து வரும் பிரீத்தி முகுந்தன், பிரபாஸ், அக்சய் குமார், விஷ்ணு மஞ்சு, போன்ற நடிகர்களின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது பார்வதி தேவியாக நடித்து வரும், காஜல் அகர்வாலின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story