'சிக்கந்தர்' படப்பிடிப்பை நிறைவு செய்த காஜல் அகர்வால்?


Kajal Aggarwal completes shooting for Sikandar?
x

'சிக்கந்தர்' படப்பிடிப்பை காஜல் அகர்வால் நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

மும்பை,

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். "புராணக் கதை' படமாக உருவாகும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என சல்மான்கான் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது

அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பை காஜல் அகர்வால் நிறைவு செய்துள்ளதாக தெரிகிறது. சுமார் 24 நாட்கள் காஜல் அகர்வால் இப்படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அவரது காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இப்படத்தின் டீசர் சல்மான் கானின் பிறந்த நாளன்று வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Next Story