1 கோடி பார்வைகளை கடந்த 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பாடல்
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படம் வரும் 20-ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
'பிரதர்' படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வரும் 20-ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் முதல் பாடலான 'என்னை இழுக்குதடி' கடந்த நவம்பர் 22-ல் வெளியானது. விவேக் எழுதிய இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ளனர். பாடல் வெளியானதிலிருந்து தற்போது வரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து ஹிட் அடித்துள்ளது.