ஜப்பானில் 'ஆயுத பூஜை' பாடலுக்கு வைப் ஆன ஜூனியர் என்.டி.ஆர் - வீடியோ வைரல்


Jr. NTR dances to the song Ayudha Pooja in Japan
x

'தேவரா' படம் வருகிற 28-ம் தேதி ஜப்பானில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

சென்னை,

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்த படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்தது. இப்படத்தின் மிகப்பெரிய வரவேற்பை அடுத்து தற்போது ஜப்பானிலும் வெளியாக உள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற 28-ம் தேதி ஜப்பானில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

ஜப்பானில் இதற்கான புரமோசனில் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒருபகுதியாக நேற்று அப்படத்தின் ஆயுத பூஜை பாடலுக்கு ஜூனியர் என்.டி.ஆர் நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story