50 மில்லியன் பார்வைகளை கடந்த 'கேம் சேஞ்சர்' படத்தின் 'ஜரகண்டி' பாடல்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற ஜனவரி 10-ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் புத்தாண்டன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ராம் சரணின் பிறந்த நாளில் வெளியான 'ஜரகண்டி' பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இப்பாடல் இதுவரை 50 மில்லியன் பார்வைகளை யூடியூப் தளத்தில் கடந்துள்ளது. இது குறித்த பதிவை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.