பார்வையாளர்களை அசர வைத்த ஜான்வி கபூர் - வைரல் வீடியோ


Janhvi Kapoor wows the audience - viral video
x

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், தற்போது தெலுங்கு திரையுலகிலும் பிரபலமடைந்து வருகிறார்.

புது டெல்லி,

டெல்லியில் நடைபெற்ற இந்தியா கவுச்சர் வீக் ஆடை அலங்கார அணிவகுப்பில் ஒய்யார நடைபோட்ட நடிகை ஜான்வி கபூர், பார்வையாளர்களை அசர வைத்தார். ஆடை வடிவமைப்பாளர் ஜெயந்தி ரெட்டியால் நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட பிளஷ் பிங்க் பிஷ் லெஹங்கா உடையில் மெழுகு பொம்மை போல் ஜான்வி கபூர் காட்சி அளித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், தற்போது தெலுங்கு திரையுலகிலும் பிரபலமடைந்து வருகிறார். ''தேவரா'' படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக அறிமுகமான பிறகு, தற்போது அவர் தனது 2-வது தெலுங்கு படமான ''பெத்தி''ல் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து இவர் பல பான்-இந்திய தெலுங்கு படங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதில் ஏஏ22xஏ6 படமும் அடங்கும். இருப்பினும், அது இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

1 More update

Next Story