'ஜன நாயகன்': படப்பிடிப்பை எப்போது முடிப்பார் விஜய் ? - வெளியான முக்கிய தகவல்

’ஜன நாயகன்’ விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜன நாயகனின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. சமீபத்திய தகவலின்படி, படப்பிடிப்பை மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்தாக தெரிகிறது.
அதே சமயத்தில் விஜய், இம்மாத இறுதிக்குள் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை முடிப்பார் என கூறப்படுகிறது. தனது பகுதியை முடித்தவுடன், அரசியல் பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






