'ஜெயிலர் 2' புரோமோ : படப்பிடிப்பு இன்று தொடக்கம்


ஜெயிலர் 2 புரோமோ : படப்பிடிப்பு இன்று தொடக்கம்
x

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜெயிலர் 2' படத்தின் புரோமோ வீடியோவை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை,

கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே வெளியான தகவலின்படி 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு "ஹுக்கும்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் 171-வது படமான கூலி திரைப்படத்தை முடித்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் வருகிற 12-ந் தேதியில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜெயிலர் 2' படத்தின் புரோமோ வீடியோவை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் படத்தின் புரோமோ வீடியோவிற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகும் இந்த வீடியோவிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.


Next Story