ரஜினியின் 'பில்லா' தோல்வி படமா? - இயக்குனர் விஷ்ணுவர்தன் கருத்தால் சர்ச்சை


ரஜினியின் பில்லா தோல்வி படமா? - இயக்குனர் விஷ்ணுவர்தன் கருத்தால் சர்ச்சை
x

விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள 'நேசிப்பாயா' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

'குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல்' ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான 'பில்லா' படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில்,இவர் தற்போது ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள 'நேசிப்பாயா' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணுவர்தன், ரஜினி நடித்த 'பில்லா' ஒரு தோல்விப் படம் என கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, 1980-ல் வெளியான ரஜினியின் 'பில்லா' படம் சரியாக ஓடவில்லை எனவும், இந்த படத்தையா ரீமேக் செய்யப்போகிறோம் என தனக்கு தோன்றியதாகவும் கூறியுள்ளார். விஷ்ணுவர்தனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்கள் பலரும் விஷ்ணுவர்தன் கருத்துக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Next Story