கிறிஸ்டோபர் நோலனுடன் மீண்டும் இணைந்த 'இன்டர்ஸ்டெல்லர்' நடிகர் - பர்ஸ்ட் லுக் வெளியீடு


Interstellar cast reunites with Christopher Nolan - first look released
x

இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது.

வாஷிங்டன்,

பிரபல ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'ஓப்பன் ஹெய்மர்'. ஓப்பன் ஹெய்மர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்பி நடித்த இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இதனையடுத்து, கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு 'தி ஒடிஸி' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில், மேட் டாமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. இவர் முன்னதாக நோலன் இயக்கத்தில் 2014-ல் வெளியான 'இன்டர்ஸ்டெல்லர்' படத்தில் நடித்தவர். மேலும், ஸ்பைடர் மேன்' பட நடிகர் டாம் ஹாலண்ட், அன்னே ஹாத்வே, ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரோன் ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மேட் டாமனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு கிறிஸ்டோபர் நோலனுடன் மீண்டும் இணைவதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி, இப்படத்தில் அவர் ஒடிசீயஸாக நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story