“கொண்டாட்டம் என்ற பெயரில்...அவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும் ”- அஜித்

தியேட்டரை சேதப்படுத்துவது முழுவதுமாக நிறுத்தப்பட வேண்டும் என அஜித் கூறினார்.
சென்னை,
கொண்டாட்டம் என்ற பெயரில் தியேட்டரை சேதப்படுத்துவது முழுவதுமாக நிறுத்தப்பட வேண்டும் என அஜித் கூறினார். இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அஜித் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், “திரையரங்கு உரிமையாளர்கள் பல லட்சங்கள் செலவு செய்து, தியேட்டரை புதுப்பிக்கிறார்கள். கொண்டாட்டம் என்ற பெயரில் உள்ளே பட்டாசுகள் வெடிப்பது, இருக்கைகளை உடைப்பது, ஒன்ஸ் மோர் கேட்டு திரையை கிழிப்பது இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும் ” என்றார்.
நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்கிய ஆதிக் மீண்டும் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
Related Tags :
Next Story






