'ஸ்ட்ரீ 2-க்கு பிறகு சரியான கதைக்காக காத்திருக்கிறேன்' - நடிகை ஷ்ரத்தா கபூர்
தனது அடுத்த படம் குறித்து நடிகை ஷ்ரத்தா கபூர் பேசியுள்ளார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான 'சாஹோ' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் 'ஆஷிக் 2, ஹைதர், ராக் ஆன்-2, ஓகே ஜானு' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இவர் கடைசியாக 'ஸ்ட்ரீ 2' படத்தில் நடித்திருந்தார். இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்து நடிகை ஷ்ரத்தா கபூர் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"வெவ்வேறு வகையான படங்கள், விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். உண்மையை சொல்லவேண்டும் என்றால் ஸ்ட்ரீ 2-க்கு பிறகு இன்னும் நல்ல கதை எதுவும் என்னிடம் வரவில்லை என்று உணர்கிறேன். அதற்காக காத்திருக்கிறேன்' என்றார்.