எனக்கு மறுபிறவி இருந்தால் நிச்சயம் இதை செய்வேன் - நடிகர் ஜாக்கி சான்
எனக்கு மறுபிறவி இருந்தால், சூப்பர் மேனாகி அன்பையும், அமைதியையும் உலகம் முழுக்க பரப்புவேன் என்று நடிகர் ஜாக்கி சான் கூறியுள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் 'தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். அவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தற்போது 'எ லெஜென்ட்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'தி மித்' படத்தின் தொடர்ச்சியாகும். இப்படம் குங்பூ யோகா படங்களின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கிறது.
ஸ்டான்லி டாங் இயக்கியுள்ள இதில் ஜாக்கி சானுடன், லே சாங், நா ஜா, ஆரிப் லீ, லி சென்,பெங் சியோவ்ரான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் இளமையான போர்வீரன் மற்றும் தற்போதைய தோற்றத்தில் ஆராய்ச்சியாளர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதற்காக 20 வயதான ஜாக்கியின் தோற்றத்திற்காக ஏ.ஜ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
'எ லெஜென்ட்' படம் தமிழில் 'விஜயபுரி வீரன்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு கடந்த ஜனவரி 3-ந் தேதி வெளியானது.
கதைப்படி, தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஜாக்கிசானுக்கு அவ்வப்போது ஒரு கனவு வருகிறது. அதில், அவர் போர் வீரனாக வருகிறார். தனது தாய்நாட்டுக்காக போராடுகிறார். நிகழ்காலத்தில், கனவில் வருபவர்கள் வருகிறார்கள். வெவ்வேறு தொழில் செய்யபவர்களாக வருகிறார்கள். அந்த கதைக்கும், இப்போதைய கால கட்டத்திற்கும் என்ன தொடர்பு. ஒரு ரகசிய இடத்தில் இருக்கும் தங்கப்புதையலை யார் கண்டுபிடித்தார்கள் என்பது கிளைமாக்ஸ்.
இந்நிலையில், இப்படம் குறித்து ஜாக்கிசான் பேசியதை தமிழில் டப் செய்து படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், 'மறுபிறவி இருந்தால் நான் சூப்பர் மேன் ஆக வேண்டும். அன்பையும், அமைதியையும் உலகம் முழுக்க என்னால் பரப்ப முடியும். அனைவரும் தியேட்டருக்கு சென்று படத்தை பாருங்கள்" என்று பேசியுள்ளார்.