பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன்...யாரையும் வர விடமாட்டேன் - சந்தோஷ் நாராயணன்


பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன்...யாரையும் வர விடமாட்டேன் - சந்தோஷ் நாராயணன்
x

‘சூது கவ்வும் 2’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

சென்னை,

எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள படம் 'சூது கவ்வும் 2-நாடும் நாட்டு மக்களும்'. இவருடன் இணைந்து ராதாரவி, ரமேஷ் திலக், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் ஆகிய பலரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரித்துள்ளன. இத்திரைப்படம் வருகிற 13-ந் தேதி வெளியாக உள்ளது.

'சூது கவ்வும் 2' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட சந்தோஷ் நாராயணன் கூறுகையில், "இனிமேல் பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன்" என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியின் போது, அவருடைய ஆரம்பகால வாழ்க்கையை நினைவுப்படுத்தி அவருக்கும் பா.ரஞ்சித்துக்கும் இடையிலான அந்த கருத்து வேறுபாட்டை பற்றியும் கூறியிருந்தார். ஆரம்பத்தில் டிஜேவாக இருந்த நான் 'அட்டகத்தி' படத்தில் முதலில் வாசிக்கும் பொழுது என்னுடைய இசை ரஞ்சித்துக்கு பிடிக்கவில்லை. அதன்பிறகு கிராமிய இசை மீது கவனம் செலுத்த சொன்னார். என்னை உருவாக்கியதில் பா.ரஞ்சித்துக்கு பங்கு உண்டு. அதனால் "இனிமேல் பா.ரஞ்சித் படங்களுக்கு நான் மட்டும் தான் இசையமைப்பேன். வேறு யாரையும் விடமாட்டேன் இது என்னுடைய கட்டளை" என கூறினார்.


Next Story