'கண்ணப்பா' படத்தில் நடிக்க 2 முறை மறுத்தேன் - அக்சய் குமார்


I refused to act in Kannapa twice - Akshay Kumar
x

’கண்ணப்பா’ படத்தில் நடிக்க 2 முறை மறுத்ததாக அக்சய் குமார் கூறி இருக்கிறார்

சென்னை,

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் டீசர் மார்ச் 1-ம் தேதி அதாவது நாளை வெளியாக உள்ளநிலையில், இப்படத்தில் நடிக்க 2 முறை மறுத்ததாக அக்சய் குமார் கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"ஆரம்பத்தில், நான் உறுதியாக இல்லை. இதனால், இரண்டு முறை கண்ணப்பா படத்தில் நடிக்க மறுத்தேன். ஆனால், இந்த கதாபாத்திரத்திற்கு நான்தான் சரியான இருப்பேன் என்ற விஷ்ணுவின் அசைக்க முடியாத நம்பிக்கை, என்னையும் நம்ப வைத்தது' என்றார்.

1 More update

Next Story