'கிங்டம்' படத்தின் முதல் பாடல் - வைரல்


HridayamLopala out now
x

இப்படம் வருகிற 30-ம் தேதி வெளியாக உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12-வது திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்திற்கு 'கிங்டம்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் தின்னனுரி இயக்கியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற 30-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான 'ஹிருதயம் லோபலா' வெளியாகி உள்ளது. இணையத்தில் வைரலாகும் இப்பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அனுமிதா நடேசன் ஆகியோர் பாடியுள்ளனர்.

1 More update

Next Story