நானியின் 'ஹிட் 3' பட டீசர் - வெளியாகும் தேதி அறிவிப்பு


HIT 3: Nani reveals the teaser date with a kickass poster
x

இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை'. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இப்படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் 3' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஹிட் 3 படத்தின் டீசர் வருகிற 24-ம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story