10 மில்லியன் பார்வைகளை கடந்த 'ஹே மின்னலே' பாடல்


10 மில்லியன் பார்வைகளை கடந்த ஹே மின்னலே பாடல்
x
தினத்தந்தி 19 Oct 2024 4:55 AM (Updated: 15 Feb 2025 7:54 AM)
t-max-icont-min-icon

அமரன் படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடலும் இப்படத்தின் முதல் பாடலுமான 'ஹே மின்னலே' பாடல் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், 'ஹே மின்னலே' பாடல் இணையத்தில் 10 மில்லியன்( 1 கோடி ) பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான 'வெண்ணிலவு சாரல்' வெளியானது குறிப்பிடத்தக்கது.


Next Story