`ஹீரோவா...வில்லனா?' - விஜய் சேதுபதி சுவாரசிய பதில்


`Hero...or villain? - Vijay Sethupathis interesting answer
x

விஜய் சேதுபதி சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை 2' படத்தில் நடித்திருந்தார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை 2' படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி, சமீபத்தில் தனியார் கல்லூரியின் கலை விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் `ஹீரோவா நடிக்க பிடித்திருக்கிறதா? அல்லது வில்லனா நடிக்க பிடித்திருக்கிறதா?' என்று கேட்டனர். அதற்கு விஜய் சேதுபதி பதிலளிக்கையில்,

"வில்லனா நடிக்கும்போது ஒரு பெரிய சுதந்திரம் இருக்கும். ஆனா, ஹீரோவா பண்ணும்போது அது இருக்காது" என்றார்.

1 More update

Next Story