அவரின் கடின உழைப்பு எனக்கு பெரிய அளவில்...தமன்னாவை பாராட்டும் பிரபல நடிகை


Tamannah’s hard work inspired me a lot:  Hebah Patel
x

தமன்னாவுடன் பணிபுரிவது பற்றி நடிகை ஹெபா படேல் பகிர்ந்திருக்கிறார்.

மும்பை,

தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹெபா படேல். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'ஆத்யக்சா' என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தெலுங்கில் 'ஆலா ஏல' என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார்.

அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் கொடுக்க, தெலுங்கில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநாட்டினார். தமிழில் 'திருமணம் எனும் நிக்காஹ்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஒடெலா 2' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமன்னாவுடன் பணிபுரிவது பற்றி நடிகை ஹெபா படேல் பகிர்ந்திருக்கிறார். அவர் பேசுகையில்,

"ஒடெலா 2 படத்திற்காக தமன்னா மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவரின் அந்த உழைப்பு எனக்குப் பெரிய அளவில் உத்வேகத்தை கொடுத்தது' என்றார்.

1 More update

Next Story