'குட் பேட் அக்லி' படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்


G.V. Prakash gives an update on the film Good Bad Ugly
x
தினத்தந்தி 8 Feb 2025 6:44 AM IST (Updated: 8 Feb 2025 11:57 AM IST)
t-max-icont-min-icon

இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் 'குட் பேட் அக்லி' படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி, எக்ஸ் தளத்தில் 'குட் பேட் அக்லி' படத்தின் இசை குறித்து அப்டேட் கேட்ட ரசிகருக்கு ' வெறியா வரும் தரமா இருக்கும்... வெயிட் அண்ட் வாட்ச்' என ஜி.வி பிரகாஷ் பதிலளித்தார்.

1 More update

Next Story