கோபி, சுதாகர் நடிக்கும் புதிய படம்...இந்த தேதியில் வெளியாகிறது படத்தின் தலைப்பு


Gopi and Sudhakars new film...The title of the film will be released on this date
x

கோபி மற்றும் சுதாகர் தற்போது புதிய படம் ஒன்றை தயாரித்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னை,

'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மூலமாக பிரபலமானவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்கள் தற்போது புதிய படம் ஒன்றை தயாரித்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தன.

இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிட்டிருந்தனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு விஜயன் இயக்குகிறார். மேலும், விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தின் தலைப்பு வருகிற 11-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story