'குட் பேட் அக்லி' படத்தின் 'காட் பிளஸ் யூ' பாடல் - வெளியான புதிய அப்டேட்


GoodBadUgly Second Single GodBlessU from today at 1 PM
x

'குட் பேட் அக்லி' படத்தின் 2-வது பாடலான 'காட் பிளஸ் யூ' இன்று வெளியாகும் என்று நேற்று புரோமோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டது.

சென்னை,

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'ஓஜி சம்பவம்' பாடல் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து 2-வது பாடலான 'காட் பிளஸ் யூ' இன்று வெளியாகும் என்று நேற்று புரோமோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்பாடல் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு புதிய அப்டேட் தெரிவித்திருக்கிறது. ஜிபி பிரகாஷ் இசையில் இந்த பாடலை அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார்.


Next Story