'குட் பேட் அக்லி' - மதுரை ரசிகர்களுக்கு அதிர்ச்சி


’Good Bad Ugly - No first show in Madurai?
x
தினத்தந்தி 8 April 2025 1:03 PM IST (Updated: 8 April 2025 2:28 PM IST)
t-max-icont-min-icon

'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் முதல் காட்சி மதுரையில் திரையிடப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்திருக்கிறார். திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், இப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தை பொறுத்தவரை, முதல் காட்சி 9 மணிக்கு மட்டுமே திரையிடப்படுகிறது.

இந்நிலையில், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் முதல் காட்சி மதுரையில் திரையிடப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் முதல் காட்சி டிக்கெட் ரூ.1,900க்கு விற்கப்படுகிறது. அதேபோல், தனி திரயரங்குகளில் முதல் காட்சி டிக்கெட் ரூ.500க்கும் விற்கப்படுகிறது.

இந்தசூழலில் ரூ.500-க்கு டிக்கெட் விற்கவில்லை என்றால் முதல் காட்சி கிடையாது என்றும் 12 மணிக்குதான் காட்சியை தொடங்க வேண்டும், என்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மதுரையில் 30 திரையரங்குகளில் இன்னும் குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் சிறப்பு காட்சி டிக்கெட் விற்பனை துவங்காதநிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


1 More update

Next Story