'தி கோட்' படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய நிறுவனங்கள்...இத்தனை கோடியா ?


GOAT satellite rights sealed for a whopping price
x

image courtecy:twitter@vp_offl

தினத்தந்தி 9 July 2024 11:55 AM IST (Updated: 9 July 2024 11:58 AM IST)
t-max-icont-min-icon

விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தின் ரிலீஸ் உரிமையை கோடி கணக்கில் பணம் கொடுத்து நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளன.

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகின. 'தி கோட்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, படத்தின் ரிலீஸ் உரிமையை மாநிலம் வாரியாக பிரித்து ஏஜிஎஸ் நிறுவனம் விற்று இருக்கிறது. அதன்படி, 'தி கோட்' படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா உரிமையை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரூ.15 கோடி கொடுத்து கைப்பற்றி இருக்கிறது.

தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.88 கோடிக்கு கைப்பற்றி உள்ளது. இதே நிறுவனம்தான் கர்நாடகா உரிமையையும் வாங்கி இருக்கிறது. கேரளாவில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் 'தி கோட்' படத்தின் உரிமையை வாங்கி உள்ளது.


Next Story