பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கி கேட் காலமானார்


Famous Hollywood actor Nicky Kate passes away
x

பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நிக்கி கேட் .

வாஷிங்டன்,

பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கி கேட் (54). இவர் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான 'டேஸ்டு அண்ட் கன்புஸ்டு' திரைப்படம் மற்றும் பாஸ்டன் பப்ளிக் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இவர் தனது கெரியரில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இந்நிலையில், நடிகர் நிக்கி கேட் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரது நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர் ஜான் ஸ்லாஸ் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், இவரது மறைவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

1 More update

Next Story