''குரங்கு நடித்தாலும் படம் ஓடும்...ஹீரோவால் ஓடுவதில்லை...'' - விஜய் ஆண்டனி


Even if a monkey acts, the film will run... - Actor Vijay Antony
x

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மார்கன்' படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

கடவுளே ஹீரோவாக நடித்தாலும், எழுத்தும், இயக்கமும் சரியாக இல்லாவிட்டால் எந்த படமும் ஓடப்போவதில்லை என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறி இருக்கிறார்.

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மார்கன்' படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற மார்கன் பட நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி,

''எந்த ஒரு படமும் ஹீரோவால் ஓடப்போவதில்லை. கடவுளே வந்து ஹீரோவாக நடித்தாலும், இயக்குனரின் எழுத்தும், இயக்கமும் சரியாக இல்லாவிட்டால் படம் ஓடப்போவதில்லை. குரங்கு, கழுதைகளை வைத்து படம் எடுத்தாலும் இயக்குனரின் எழுத்தும், இயக்கமும் சிறப்பாக இருந்தால் படம் வெற்றி பெரும் '' என்றார்.

1 More update

Next Story