பிரமாண்டமாக உருவாகும் துல்கர் சல்மானின் அடுத்த படம்

துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
சென்னை,
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான இவர், கடந்த 2012ம் ஆண்டு வெளியான 'செக்கண்டு சோவ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
அதை தொடர்ந்து "தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும், சீதா ராமம், லக்கி பாஸ்கர்" உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். இவர் தற்போது நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் 'ஐ அம் கேம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், துல்கர் சல்மானின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அறிமுக இயக்குனர் ரவி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக உள்ள படத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ளார். எஸ்.எல்.வி நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.






