'இந்த 3 படங்களை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்' - எஸ்.எஸ்.ராஜமவுலி


Do you know which Telugu films SS Rajamouli is looking forward to? Here they are
x
தினத்தந்தி 13 April 2025 3:12 PM IST (Updated: 28 April 2025 11:05 AM IST)
t-max-icont-min-icon

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மேக்கிங் ஆவணப்படம் கடந்த 11-ம் தேதி ஜப்பானில் வெளியானது.

சென்னை,

பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, தனது மகன் எஸ்.எஸ். கார்த்திகேயாவுடன் சேர்ந்து, உலகளவில் புகழ்பெற்ற 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மேக்கிங் ஆவணப்படத்தை புரமோசன் செய்ய ஜப்பானுக்கு சென்றனர். கடந்த 11-ம் தேதி அங்கு வெளியான இந்த ஆவணப்படம் அருமையான வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில், ரசிகர்கள் முன்னிலையில் ஒரு ஊடக நிகழ்வில் பேசிய ராஜமவுலி, மூன்று தெலுங்கு படங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறினார். அதன்படி, ராம் சரணின் பெத்தி, பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் படம் மற்றும் பிரபாஸின் ஸ்பிரிட் ஆகிய படங்களை கூறினார்.

தற்போது ராஜமவுலி, மகேஷ் பாபுவை வைத்து தற்காலிகமாக எஸ்.எஸ்.எம்.பி29 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படம் 2027 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

1 More update

Next Story