ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகும் 2 முக்கியமான அப்டேட்டுகள்...என்னென்ன தெரியுமா?


ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகும் 2 முக்கியமான அப்டேட்டுகள்...என்னென்ன தெரியுமா?
x

ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'வேட்டையன்'. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171-வது படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தில் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சுருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னரே 'ஜெயிலர் 2' படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளான வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதியில் 2 முக்கியமான அப்டேட்டுகள் வெளியாக உள்ளன. அதாவது கூலி படத்தின் டீசர் மற்றும் ஜெயிலர் 2 படத்தின் புரோமோ வீடியோ ஆகியவை வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story