இயக்குனர் சசியுடன் இணையும் சசிகுமார்


இயக்குனர் சசியுடன் இணையும்  சசிகுமார்
x
தினத்தந்தி 15 March 2025 10:04 AM (Updated: 15 March 2025 10:05 AM)
t-max-icont-min-icon

இயக்குனர் சசியின் அடுத்த படத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

'ரோஜாக்கூட்டம்', 'பூ' ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சசி. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனியை வைத்து 'பிச்சைக்காரன் என்னும் படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ஹரீஷ் கல்யாணை வைத்து 'நூறு கோடி வானவில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக சித்தி இட்னானி நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சசி இயக்கும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக 'லப்பர் பந்து' ஸ்வாசிகா நடிக்கிறார் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.


Next Story