திண்டுக்கல் லியோனி மகனுக்கு ஜோடியாகும் 'இரவின் நிழல்' பட நடிகை


Dindigul Leones sons Delivery Boy shooting begin
x
தினத்தந்தி 11 Feb 2025 8:24 AM (Updated: 11 Feb 2025 9:04 AM)
t-max-icont-min-icon

இப்படத்தில் கதாநாயகியாக 'இரவின் நிழல்' பட நடிகை பிரிகிதா நடிக்கிறார்.

சென்னை,

பிரபல பட்டிமன்ற நடுவரும், நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி. இவரது மகன் லியோ சிவக்குமார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'அழகிய கண்ணே' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து அவர் நடிக்கும் படம் 'டெலிவரி பாய்'. இப்படத்தை சுசீந்திரனின் உதவி இயக்குனர் நானி இயக்குகிறார். கதாநாயகியாக 'இரவின் நிழல்' பட நடிகை பிரிகிதா நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கி இருக்கிறது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருக்கிறது.


Next Story