மீண்டும் இணையும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி!...அறிவிப்பு வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
வெற்றிமாறன் இயக்கும் 9-வது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை,
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'விடுதலை 2'. இப்படத்தில் சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், விடுதலை பாகம் 2-ன் வெற்றிகரமான 25 நாளை முன்னிட்டு ரசிகர்கள், பத்திரிக்கை ஊடகம், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவை ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் அதில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
அதாவது, "இயக்குனர் வெற்றிமாறனின் 7-வது படமான விடுதலை 2 வெற்றிக்குப் பிறகு அவரது இயக்கத்தில் 9-து படத்தில் நடிப்பு அசுரன் தனுஷ் அவர்களுடன் இணைவதில் ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட மகிழ்ச்சியடைகிறது. தொடர் வெற்றிப் படங்களை வழங்கிய இந்த கூட்டணி மீண்டும் இணைந்து, புதிய சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கிறது. மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று அதில் பதிவிட்டுள்ளது. "ஆடுகளம், வடசென்னை, அசுரன்" என இவர்கள் இருவருடைய கூட்டணியில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், விடுதலை 2 வெற்றிக்குப் பிறகு, ஆர்எஸ். இன்போடைன்மெண்ட் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி அவர்களுடன் மீண்டும் இணைகிறது. விடுதலை தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பைச் செய்த இயக்குனர் வெற்றிமாறன் குழுவின் முக்கிய உறுப்பினரான மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.