நடிகையாக அறிமுகமாகும் டிஜிபி சங்கர் ஜிவால் மகள்


DGPs daughter to debut as an actress
x
தினத்தந்தி 31 Jan 2025 12:33 AM (Updated: 31 Jan 2025 1:00 AM)
t-max-icont-min-icon

ரவி மோகன் தற்போது 'கராத்தே பாபு' படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்பொழுது ஜீனி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ரவி மோகனின் 34-வது படத்திற்கு தற்காலிகமாக 'ஆர்.எம் 34' எனப்பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில், 'ஆர்.எம் 34' படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதன்படி, இப்படத்திற்கு 'கராத்தே பாபு' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.


Next Story