"மெய்யழகன்" படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!


தினத்தந்தி 3 Oct 2024 3:30 PM GMT (Updated: 3 Oct 2024 3:35 PM GMT)

'மெய்யழகன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வரும் 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' என துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

இப்படம் கடந்த 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவந்தாலும், நீளம் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. இந்த படத்தின் நீளம் சற்று சலிப்பை ஏற்படுத்துவதால் 18 நிமிட காட்சிகளை படத்தில் இருந்து படக்குழு நீக்கி உள்ளது.

இந்நிலையில் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகளை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் படத்தில் இடம்பெற்ற அருமையான காட்சிகளில் இதுவும் ஒன்று எனவும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Next Story