ரீ-ரிலீஸ் செய்யப்படும் தீபிகா படுகோன் நடித்துள்ள 'பத்மாவத்' படம்


ரீ-ரிலீஸ் செய்யப்படும் தீபிகா படுகோன் நடித்துள்ள பத்மாவத் படம்
x

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் நடித்துள்ள பத்மாவத் திரைப்படம் 7 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

சென்னை,

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'பத்மாவத்'. இந்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இதிகாசக் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். ரன்வீர் அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஷாஹித், ஜிம் சர்ப் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டையும், பெரும் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது. இந்த நிலையில் இப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

அதாவது இப்படம் வெளியான 7 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் வருகிற 24-ந் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Next Story