'ராபின்ஹுட்' டிரெய்லர் வெளியீட்டு விழா - ஐதராபாத் வந்த டேவிட் வார்னர்

ஸ்ரீலீலா மற்றும் நிதின் இணைந்து நடித்துள்ள 'ராபின்ஹுட்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் டேவிட் வார்னர் நடித்துள்ளார்.
ஐதராபாத்,
ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'. நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் டேவிட் வார்னர் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், இதில் கலந்துகொள்வதற்காக தற்போது ஐதராபாத் வந்திருக்கிறார் டேவிட் வார்னர். இப்படத்தில் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
Related Tags :
Next Story