'சங்கராந்திகி வஸ்துன்னம்' பட இயக்குனருடன் இணையும் சிரஞ்சீவி?


Chiranjeevi to team up with director Anil Ravipudi
x

பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி.

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் அனில் ரவிபுடி. இவரது இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியான படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்' . இப்படத்தில், வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி இதுவரை 10 நாட்களை கடந்துள்ளநிலையில், வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 230 கோடி வசூல் செய்துள்ளது.

இப்படத்தையடுத்து அனில் ரவிபுடி, சிரஞ்சீவியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை ஷைன் ஸ்கிரீன்ஸ் சினிமாவின் சாஹு கரபதி தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story