ராம் சரணின் 16-வது படத்தில் இணைந்த பாலிவுட் வெப் சீரிஸ் பிரபலம்


Bollywood web series actor join Ram Charans 16th film
x
தினத்தந்தி 1 Dec 2024 1:26 PM IST (Updated: 1 Dec 2024 1:29 PM IST)
t-max-icont-min-icon

தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் ஜனவரி மாதம் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தை தொடர்ந்து, ராம் சரண் தனது 16-வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் சிவராஜ் குமார், ஜகபதி பாபு இணைந்தநிலையில், தற்போது மிர்சாபூர் வெப் சீரிஸ் நடிகர் திவ்யேந்து இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓ.டி.டியில் வெளியான பாலிவுட் வெப் சீரிஸ் 'மிர்சாபூர்'. இதற்கு மக்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பையடுத்து, 2020-ம் ஆண்டு இந்த தொடரின் 2-வது சீசனும் கடந்த ஜூலை மாதம் 3-வது சீசனும் வெளியாகின. தற்போது, இந்த தொடர் திரைப்படமாகவும் உருவாக உள்ளது.


Next Story