'எஸ்.எஸ்.எம்.பி 29'படத்தில் மகேஷ் பாபுவின் அப்பாவாக நடிக்கும் பாலிவுட் நடிகர்?


Bollywood Star key role in SSMB29
x

நடிகர் மகேஷ் பாபுவை வைத்து "எஸ்எஸ்எம்பி 29" படத்தை ராஜமவுலி இயக்கவுள்ளார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து "எஸ்எஸ்எம்பி 29" படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், இப்படத்தில் மகேஷ் பாபுவின் அப்பா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



Next Story