அடுத்த படத்தில் 'மகா லட்சுமி'யாக நடிக்கும் பாக்யஸ்ரீ போர்ஸ்
பாக்ய ஸ்ரீபோர்ஸ், தனது அடுத்த படத்தில் ராம் பொத்தினேனியுடன் இணைந்துள்ளார்.
சென்னை,
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'யாரியன் 2' படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் பாக்யஸ்ரீ போர்ஸ். அதனைத்தொடர்ந்து சந்து சாம்பியன், ரவி தேஜா நடிப்பில் வெளியான மிஸ்டர் பச்சான் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இதனையடுத்து, பாக்ய ஸ்ரீபோர்ஸ், ராம் பொத்தினேனியுடன் இணைந்துள்ளார். இப்படத்தை மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பாலிஷெட்டி பட இயக்குனர் மகேஷ் பாபு இயக்குகிறார்.
இந்நிலையில், பாக்யஸ்ரீ போர்ஸின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படத்தில் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாக்யஸ்ரீ போர்ஸ் இப்படத்தில் மகா லட்சுமியாக நடிக்கிறார்.
மறுபுறம் பாக்யஸ்ரீ போர்ஸ், விஜய் தேவரகொண்டாவின் 12-வது படத்திலும், துல்கர் சல்மானுடன் காந்தா படத்திலும் நடித்து வருகிறார்.
Related Tags :
Next Story