ராம் பொத்தினேனியுடன் இணைந்த பாக்யஸ்ரீ போர்ஸ்

தனது அடுத்த படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், ராம் பொத்தினேனியுடன் நடிக்கிறார்.
சென்னை,
கடந்த ஆண்டு வெளியான இந்தி படமான 'யாரியன் 2' படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் பாக்யஸ்ரீ போர்ஸ். அதனைத்தொடர்ந்து சந்து சாம்பியன் படத்தில் நடித்தார். இந்த 2 பாலிவுட் படங்களையடுத்து, கடந்த ஆக்ஸ்ட் மாதம் 15-ம் தேதி ரவி தேஜா நடிப்பில் வெளியான மிஸ்டர் பச்சான் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படம் போதுமான அளவில் ரசிகர்களை ஈர்க்கத்தவறியது. இந்நிலையில், பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, பாக்ய ஸ்ரீபோர்ஸ் தனது அடுத்த படத்தில் ராம் பொத்தினேனியுடன் இணைந்துள்ளார். இப்படத்தை மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பாலிஷெட்டி பட இயக்குனர் மகேஷ் பாபு இயக்குகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படகள் வெளியாகி உள்ளன. பாக்யஸ்ரீ போர்ஸ் மேலும், விஜய் தேவரகொண்டாவின் 12-வது படத்திலும், துல்கர் சல்மானுடன் காந்தா படத்திலும் நடித்து வருகிறார்.