மம்முட்டி நடித்துள்ள 'பசூக்கா' படத்தின் டீசர் குறித்த அப்டேட்


மம்முட்டி நடித்துள்ள பசூக்கா படத்தின் டீசர் குறித்த அப்டேட்
x
தினத்தந்தி 14 Aug 2024 8:13 AM IST (Updated: 11 Jan 2025 5:19 PM IST)
t-max-icont-min-icon

டீனோ டென்னிஸ் இயக்கத்தில் மம்முட்டி 'பசூக்கா' படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்.

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மவுனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும், சமீபத்தில் வெளியான 'டர்போ' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், புதுமுக இயக்குனரான டீனோ டென்னிஸ் இயக்கத்தில் மும்முட்டி 'பசூக்கா' என்ற படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் காயத்ரி ஐயர் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மிதுன் முகந்தன் இசையமைத்துள்ளார். மேலும், நிமிஷ் ரவி மற்றும் ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், நடிகர் மம்முட்டி தனது எக்ஸ் தளத்தில் 'பசூக்கா' படத்தின் டீசர் குறித்த அப்பேட்டை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, 'பசூக்கா' படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்ற போஸ்டரை பதிவிட்டுள்ளார்.


Next Story