மீண்டும் தமிழ் படத்தில் ஆஷ்னா சவேரி?


Ashna Zaveri back in Tamil film
x

ஆஷ்னா சவேரி மீண்டும் சினிமாவில் நடிக்க வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை,

தமிழில் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்', 'நாகேஷ் திரையரங்கம்', 'கன்னித்தீவு' உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை ஆஷ்னா சவேரி.

தொடர்ந்து தமிழில் பெரிய அளவில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், திடீரென்று 5 ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்னர் 'எம்.ஐ.3' என்ற படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்தார். தற்போது 2 ஆண்டுகளாக அவர் படங்கள் நடிக்கவில்லை.

இந்நிலையில், ஆஷ்னா சவேரி மீண்டும் தமிழில் படங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2 கதைகளை அவர் கேட்டிருப்பதாகவும், அதில் ஒரு கதையை ஓகே செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

1 More update

Next Story