அனுஷ்கா ஷெட்டியின் 'காதி' பட அப்டேட்


Anushka Shetty’s Ghaati: The latest update is here
x
தினத்தந்தி 17 March 2025 9:33 AM IST (Updated: 30 April 2025 9:50 AM IST)
t-max-icont-min-icon

'காதி' படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

'அருந்ததி' என்ற பேய் படத்தில் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவரின் சினிமா வாழ்க்கையில் 'பாகுபலி' முக்கிய படமாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'.

தற்போது இவர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் தனது 50-வது படமான "காதி" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர்கள் இருவரும் 2010-ம் ஆண்டு 'வேதம்' என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். காதி பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில், அனுஷ்காவுடன், விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது அவரது தெலுங்கு அறிமுக படமாகும். இந்நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இம்மாத இறுதியில் 'காதி' படத்தின் புரமோஷன் தொடங்கும் என்று கூறப்படுகிறது

1 More update

Next Story