கமல், ரஜினியை தொடர்ந்து சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் அனிருத்?

அனிருத் "ஜெர்சி," "கேங் லீடர்" மற்றும் "தேவரா" போன்ற தெலுங்கு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். கமல்ஹாசனின் "விக்ரம்" சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" போன்ற படங்களின் மாபெரும் வெற்றிகளில் அவரது பின்னணி இசை முக்கிய பங்கு வகித்தது. இவர் தற்போது அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் 6-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்திருக்கும் அனிருத் தற்போது சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, நானி தயாரிப்பில் தசரா பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இப்படத்திற்கு இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிரது.
அனிருத் "ஜெர்சி," "கேங் லீடர்" மற்றும் "தேவரா" போன்ற தெலுங்கு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.