"கிங்டம்" டீசர் டிராக் ரிலீஸ் தேதியை அறிவித்த அனிருத்


கிங்டம் டீசர் டிராக் ரிலீஸ் தேதியை அறிவித்த அனிருத்
x

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘கிங்டம்’ படத்தின் டீசர் டிராக் வரும் 17 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாக 'பேமிலி ஸ்டார்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'விடி12' எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கவுதம் தின்னனுரி இயக்குகிறார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதன்படி இப்படத்திற்கு 'கிங்டம்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த டீசருக்கு தமிழில் சூர்யாவும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும், இந்தியில் ரன்பீர் கபூரும் குரல் கொடுத்துள்ளனர். இப்படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.

'ஜெர்ஸி' படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி கிங்டம் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில், 'கிங்டம்' படத்தின் டீசர் டிராக் வரும் 17ம் தேதி மாலை 6:03 மணிக்கு வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார்.


Next Story